பிரியாமணி நடிக்கும் பரபரப்பான வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’!

0

Loading

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி – மனோஜ்பாஜ்பாய் அணியுடன் இணைந்து சந்தீப் கிஷன் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’

மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப் கிஷன் கூட்டணியில் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’

அமேசான் பிரைம் வீடியோ சமீபத்திய வெளியீடுகள் மற்றும் புதிய பரிமாண வலைத் தொடர்களை பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் திருட்டு வீடியோக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியத் திரையுலகின் தயாரிப்பாளர்கள் இந்த தளத்தை ஒரு பெரிய தீர்வாக கண்டுபிடித்துள்ள நிலையில், இணையத் தொடர்கள் சவ்தேச தொடர்களுக்கு இணையாக உருவாக்கப்படுவதால் பார்வையாளர்களை கூடுதலாக ஈர்க்கிறது. அமேசான் பிரைம் வீடியோ அனைத்து வலைத் தொடர்களும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்று உறுதியளிக்கிறது. இதனால் மொழிகளுக்கிடைய ஏற்படும் தடைகளின் இடைவெளியைக் குறைத்து பார்வையாளர்கள் பல்வேறு அம்சங்களையும் கண்டு ரசிக்க முடியும். தற்போது பெரிய பொருட்செலவில் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற அடுத்த வலைத் தொடரை வெளியிடவுள்ளார்கள். இதில் தேசிய விருதுபெற்ற நடிகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோஜ் பாஜ்பாய், தேசிய விருது பெற்ற நடிகை பிரியா மணி, ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன், நீரஜ் மாதவ், ஷாரிப் ஹாஷ்மி, குல் பினாங், தர்ஷன் குமார், சன்னி ஹிந்துஜா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோரி நடிக்கிறார்கள். ‘ஸ்ட்ரீ’, ‘கோ கோவா கான்’, ‘ஷார் இன் த சிட்டி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற இரட்டை இயக்குநர்கள்என்று விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ராஜ் & டி.கே (ராஜ் நிடிமோரு கிருஷ்ணா டி.கே) இருவரும் இப்படங்களை சிறிய பட்ஜெட்டில் எடுத்தனர். ஆனால், அது தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது. தற்போது அவர்கள் இந்த வலைத் தொடர் மூலம் டிஜிட்டர் தளத்திற்குள் நுழைகிறார்கள். இதில் 10 அத்தியாயங்கள் வேடிக்கையான மற்றும் அதிகமாக மிரள வைக்கும் திரில்லர் தருணங்களைக் கொண்டுள்ளது. இந்த வலைத் தொடரை டி2ஆர் (D2R) பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

‘தி ஃபேமிலி மேன்’ ஸ்ரீகாந்த் திவாரி என்ற மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைக் கூறும் படமாக இருக்கும். தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புக்களையும் தவறாமல் இரண்டையும் சமநிலையில் சிறப்பாக செயல்படுகிறார் என்பது தான் ‘தி ஃபேமிலி மேன்’.

10 அத்தியாயங்களை உள்ளடக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ அமேசான் பிரைம் வீடியோவில் வரும் செப்டம்பர் 20, 2019 முதல் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன், ஜப்பான், பிரஞ்சு, இத்தாலி, பிரேசில், போர்ச்சுகீசு மற்றும் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும், 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்படும். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைத்து இடங்களிலும் சிறந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய உள்ளடக்கம், இயக்குநர் விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், அமேசான் தொடர்ந்து தனித்துவமான மற்றும் உயர்தரமான கதைகளை நம் பார்வையாளர்களுக்கு ‘தி ஃபேமிலி மேன்’ உடன் கொண்டு வருகிறது. கேமராவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் திறமைகளை வலுப்படுத்தும் வீடாக இருக்கும் என உறுதிப்படுத்துகிறது. வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சமப்படுத்த முயற்சிக்கும் ஒரு குடும்ப மனிதனின் போராட்டங்கள், அனைவருக்கும் ஆழமாக தொடர்புபடுத்தக்கூடிய வகையில் இப்படம் அமைந்திருக்கும்.

அமேசான் ஒரிஜினர், ‘தி ஃபேமிலி மேன்’ தயாரிப்பாளர்கள் ராஜ் டி.கே., தங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம், நீண்ட-வடிவ கதையைக் கூற விரும்பினோம். அதற்காக சரியான தளத்திற்காக காத்திருந்தோம். அப்போதுதான் அமேசான் பிரைமில் அற்புதமான பங்கதாரரைக் கண்டோம். புதிய கதைக்களம், சவாலானதாகவும், திருப்திகரமாகவும் ‘தி ஃபேமிலி மேன்’ உடன் முதல் பயணத்தை உருவாக்கியுள்ளோம். இது உண்மையிலேயே சிறந்த பயணமாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற ஆக்ஷன் திரில்லருடன் நகைச்சுவைத் தொடர்புபடுத்தப்படாததாகத்தான் இருக்கும். ஆனால், இத்தொடரை புவி-அரசியலோடு ஆக்ஷன் திரில்லராகவும், நகைச்சுவைக் கலந்தும் கொடுத்துள்ளோம்.

Share.

Comments are closed.