236 total views, 1 views today
இயக்குநர் விஜய்யின் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் ‘லஷ்மி’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. மேலும், படத்தில் ஒரு காட்சிகூட நீக்கமில்லை என்பதில் படக் குழுவினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்தியாவில் மிகவும் கொண்டாடப்படும் நடனப் புயல் பிரபுதேவா மற்றும் குழந்தைகளின் விருப்பமான ஐகான் டித்யா பண்டே இருவரும் இந்தப் படத்தில் நடித்திருப்பது, எதிர்பார்ப்புகளை மிகவும் அதிகமாக்கி இருக்கின்றன. திறமையான நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் நடித்திருப்பதும் படத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
இந்த ‘லஷ்மி’ திரைப்படத்தின் விளம்பரங்களும், பாடல்களும் ஏற்கனவே அனைத்து வயதினரிடமும் பரவலாக எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன.
பொதுவாக இயக்குநர் விஜய்யின் திரைப்படங்கள் அனைத்தும் குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கத் தவறியதில்லை. அதேபோல் இந்தப் படமும் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தியேட்டருக்கு வரவழைக்கும் என்று உறுதியாய் நம்புகிறது தயாரிப்பு தரப்பு.