Tuesday, December 10

U1 ரெகார்டஸ் வெளியிடும் ‘செல்வோம் வா’

Loading

மலேசியாவை சேர்ந்த  தனி நபர் இசை கலைஞர் ஈஸ்வர் ராகவன் உருவாகியுள்ள பாடல் தான் ‘செல்வோம் வா’. விடுமுறையில் தனிமையில் நெடும் பயணம் மேற்கொள்ளும் ஒரு மனிதன் தனக்கும் இயற்க்கை மற்றும் மனிதத்துக்கும் உண்டான தொடர்பை உணர்வதே ‘செல்வோம் வா’ வீடியோ பாடல். இந்த விடியோவை கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.ஓவியா ஓமாபதியின் வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. ‘ராசாளி’ பாடல் புகழ் சாத்தியபிரகாஷ் மற்றும் சுதர்ஷன் அசோக் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
அக்டோபர் 20 ஆம் தேதியன்று இப்பாடலை U1 ரெகார்டஸ் ரிலீஸ் செய்துள்ளது. நிறைய திறமையான  இசை கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதே U1 நிறுவனத்தின் நோக்கமாகும். அவ்வாறான திறமையாக ஈஸ்வர் ராகவனை யுவன் கண்டுள்ளார். ‘செல்வோம் வா’ பாடல் ஏற்கனவே ”Agni Showdown 2016” விழாவில் சிறந்த தனி நபர் இசை விடியோ விருதையும், ‘Global Music Award Festival’ விழாவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளது. ‘TMFF’ பெஸ்டிவலுக்கும் இப்பாடல் தேர்வாகியுள்ளது.
பாடல்  லிங்க் :