ஒயிட் லைன் புரடக்ஷன்ஸ் சார்பில் அன்பழகன் தயாரிக்கும் படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, பொன்ராமிடம் உதவி இயக்குநராகப் பாணியாற்றிய அருண் சந்திரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒயிட் லைன் புரடக்ஷன்ஸ் அலுவலகத்தை இன்று விஜய்சேதுபதி திறந்து வைக்க, இயக்குநர்கள் பொன்ராம், சத்தியசிவா மற்றும் பலர் அலுவலகத் துவக்க விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.