‘அதி மேதாவிகள்’ – அரியர்ஸ் மாணவர்களுக்கு ஓர் சமர்ப்பணம். மருத்துவம், என்ஜினீரிங், கலை, சட்டம் என மாணவர்கள் பல்வேறு துறைகளில் கல்வி பிரிந்து இருந்தாலும், அவர்கள் அனைவரையும் ஒரு சொல் மூலம் ஒன்றிணைத்து விடலாம்….. அது தான் ‘அரியர்ஸ்’. அத்தகைய வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாகி வருவது தான், இயக்குநர் சிகரம் பாக்கியராஜின் உதவியாளர் டி ரஞ்சித் மணிகண்டன் இயக்கி வரும் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம்.
தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘பிரை – காம்’ (நட்பும், நகைச்சுவையும் கலந்த பாணியில்) என்னும் புத்தம் புதிய கதை களத்தை கொண்டு உருவாகி வருகிறது ‘அதி மேதாவிகள்’ திரைப்படம். ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தில் சன் மியூசிக் புகழ் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது…. பாலசுப்ரமணியனின் உதவியாளர் விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவாளராகவும், ஏ ஆர் ரஹ்மானின் கே எம் இசை பள்ளியில் இருந்து உதயமான ஆதித்யா – சூர்யா இசையமைப்பாளர்களாகவும், கெத்து படப்புகழ் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பாளராகவும் இந்த ‘அதி மேதாவிகள்’ பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.
“அரியர்ஸ் என்ற வார்த்தையை வெறுத்தாலும், அதோடு தான் பெரும்பாலான மாணவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மையமாக கொண்டு உருவாகி வருவது தான் எங்களின் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம். கல்லூரி பருவத்தில் ‘அரியர்ஸ்’ என்ற சொல்லை கடந்து வராத மாணவர்கள் யாரும் இருக்க முடியாது…. ஒரு மாணவனின் தரம் என்ன என்பதை அவன் வைத்திருக்கும் அரியர்ஸ் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்ற தவறான கருத்து, சமுதாயத்தில் பரவி வருகின்றது…….கோல்ட் மெடல் வாங்கிய மாணவர்கள் எல்லாம் உயர்ந்த பதவியிலும் இல்லை….. அரியர்ஸ் வைத்த மாணவர்கள் எல்லாம் தாழ்ந்த பதவியிலும் இல்லை….. மக்கள் மத்தியில் பரவி இருக்கும் இந்த தவறான கருத்து, நடுத்தர மாணவர்களின் வாழ்க்கையில் எப்படி இருக்கும்….
விக்ரம் – சுஜி ஆகிய இருவரும் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்கள்….இவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருக்கும் அரியர்ஸ் பேப்பர்களை எப்படி கிளியர் செய்கிறார்கள் என்பது தான் ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தின் கதை. என்னை உட்பட அரியர்ஸ் வைத்த, வைத்து கொண்டிருக்கின்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம் சமர்ப்பணம். இத்தகைய தனித்துவமான கதையம்சத்தை ஊக்குவித்து, என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு பேராதரவையும், நம்பிக்கையையும் அளித்து வரும் என்னுடைய தயாரிப்பாளர் மால்காம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….முன்னாள் மாணவர்களையும், இந்நாள் மாணவர்களையும் அரியர்ஸ் மூலம் இணைக்க கூடிய ஒரு பாலமாக எங்களின் ‘அதி மேதாவிகள்’ இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘அதி மேதாவிகள்’ படத்தின் இயக்குநர் டி ரஞ்சித் மணிகண்டன்.