Saturday, December 14

Movies

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

Movies
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு! தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் 'வெங்கி 75' எனும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 'ஹிட்' எனும் பெயரில் வெளியான முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி வெற்றிப் பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் 'வெங்கி 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார். 'எஃப் 3' எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பட...
டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த  நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!

டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!

Movies
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. இதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து இருப்பார். இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு பார்ப்பவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடிகர் விஷால் சோமுவைத் துரத்திக் கொண்டு செல்லும்படி ஒரு காட்சி வந்திருக்கும். அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லாரியில் அடிபட்டு இறந்து விடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பு நடக்கும் போது இந்தக் காட்சியைப் படமாக்குவது அபாயம் நிறைந்தது என்பதால் முதலில் சண்டைக் கலைஞர்களை வைத்து டூப் போட்டுப் படமாக்கலாம் என்று இயக்குநர் சரவணன் திட்டமிட்டு இருந்தார். படப்பிடிப்பில் ஏனோ சில காரணங்களால் இந்தக் காட்சியை நடிகர் சோமுவையே நடிக்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்த...
தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி – சாய் பல்லவி

தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி – சாய் பல்லவி

Movies
பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் கார்கி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் *இயக்குனர் கவுதம் ரவிச்சந்திரன் பேசும்போது,* கார்கி படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் அனைவரும் ஆதரவு கொடுத்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு வைத்த முதல் புள்ளி. இடைவேளையிலேயே நேர்மறையான விமர்சனங்கள் வந்தது. இதுபோன்று மற்றொரு வெற்றி மேடையில் சந்திப்போம். மிர்ச்சி செந்த...
“ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

“ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

Movies
வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள ரங்கோலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். இதில் ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்க்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைப்பாளராகவும், மருதநாயகம் ஒளிப்பதிவாளராகவும், ரா.சத்திய நாராயணன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்....
“சிவி-2”மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து கே.ஆர்.செந்தில் நாதன் இப்படத்தின் தொடர்ச்சியை இயக்கியுள்ளார்

“சிவி-2”மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து கே.ஆர்.செந்தில் நாதன் இப்படத்தின் தொடர்ச்சியை இயக்கியுள்ளார்

Movies
கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கத்தில் கே.சுந்தர் தயாரிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் “சிவி”. திகிலின் உச்சம் தொட்டு சக்கைபோடு போட்ட படம். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து கே.ஆர்.செந்தில் நாதன் இப்படத்தின் தொடர்ச்சியை இயக்கியுள்ளார். ஆர் மாஸ் ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக லலிதா கஸ்தூரி கண்ணன் “சிவி-2” திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தேஜ் சரண்ராஜ், சுவாதி, யோகி, தாடி பாலாஜி, சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதைப்படி.., 2007ல் வெளியான “சிவி” படத்தின் தொடர்ச்சி என்பதால். “சிவி” படத்தில் பேய் செய்த கொலையையும் அந்த ஆஸ்பத்திரியிலுள்ள அமானுஷ்யத்தையும் சில காலேஜ் ஸ்டுடண்ட்ஸ், மக்களிடம் யூட்யூப் லைவ் செய்து பணம் ஈட்ட நினைக்கிறார்கள். அப்போது இவர்களை இயக்கும் தேஜ் சரண்ராஜ் அவர்களுக்கே தெரியாமல் மாயாஜால வேலைகள் செய்து வியூஸ்களை அள்ளிவிடுகிறார். அப்போது அவர்களுக்கு காத்திர...
Disney+ Hotstar to premiere actor Sibiraj starrer “Vattam”

Disney+ Hotstar to premiere actor Sibiraj starrer “Vattam”

Movies
Actor Sibiraj starrer Vattam, produced by SR Prakash Babu & SR Prabhu of Dream Warrior Pictures, will have its world premiere on Disney+ Hotstar. Following the phenomenal response to Nayanthara’s O2 & Kamal Haasan’s Vikram, Disney+ Hotstar has announced the premiere of its next outing titled ‘Vattam’ featuring Sibiraj in the lead role. Kamalakannan has directed this movie, and SR Prakash Babu & SR Prabhu of Dream Warrior Pictures have produced it. Vattam, an edge-of-seat thriller, revolves around a bunch of characters – Mano, Ramanujam, Gautham, and Paru, who experience turbulent series of events in a span of 24 hours that changes their lives and perception about life forever. Actor Sibiraj says, “Vattam is an important film in my career as it marks my first associatio...
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்

Movies
நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நி...
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

Movies
*'சீயான் 61' பட தொடக்க விழா* சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோ...
மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N ராகவன்

மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N ராகவன்

Movies
அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது… என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது. தமிழில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக இல்லை எனவே அதை சொல்லலாம் என நினைத்தேன்....