Thursday, March 27

அமெரிக்காவை தொடர்ந்து ஐதராபாத்திலும் ஆடிப்பாடும் அகில்

Loading

அகில் அக்கினேனி, ராணா டக்குபதி, நாயகி கல்யாணி பிரியதர்ஷன், இசையமைப்பாளர் அனூப் ரூபன்ஸ் ஆகியோர் தங்களின்  புரமோஷனல் டூர் மூலம் அமெரிக்க ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கடந்த வாரம் கொடுத்தனர். நியூ ஜெர்ஸி, டல்லாஸ், சான் ஜோஸ் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்த ஹலோ படக்குழுவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று தங்களின் அன்பால் திக்குமுக்காட செய்தனர்.

ஹலோ படக்குழுவினரின் அமெரிக்க டுர், வழக்கமான விளம்பர டூராக இல்லாமல் ஆடல், பாடல், நடிகர்கள் ரசிகர்கள் உரையாடல் என ஒரு கண்கவர் விழாவாக நடைபெற்றது. அகில் படங்களில் இருந்து பாடல் பாடியதோடு, படக்குழுவோடு இணைந்து துள்ளலான நடனம் ஆடியதை காண ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. ராணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது அனைவரது உற்சாகத்தையும் பறைசாற்றியது. நடிகர்களோடு ரசிகர்கள் தனித்தனியாக சந்தித்து பேசும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. 

விழா நடந்த மூன்று இடங்களுமே ரசிகர் கூட்டம் நிரம்பி வழிந்து, வெற்றிகரமான விழாவாக முடிந்தது. ரசிகர்களும் ஹலோ யுஎஸ்ஏ என்ற அடைமொழியோடு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கினார்கள். தற்போது ஹலோ படக்குழு அதே போன்றதொரு விழாவை ஐதராபாத்தில் பட  ரிலீஸுக்கு இரு நாட்கள் முன்னதாக 20ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள். இந்த ஹலோ அகிலுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி மாதாபூர் என் கன்வென்ஷன் செண்டரில் நடக்கிறது. அகில் மற்றும் படக்குழுவை வாழ்த்த, மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

ரிலீஸுக்கு இரு நாட்களே இருக்கும் நிலையில் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் உற்சாகம் தொற்றிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 22 ஆம் தேதி ஹலோ சொல்ல காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.