705 total views, 1 views today
நன்றி சொல்லுதல் என்பது நம் கலாச்சாரத்தின் இன்றி அமையாத அம்சமாகும்.”நிபுணன்” திரைப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் ” நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிக பெருமை.இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார். தயாரிப்பாளர் உமேஷ் பேசும் போது” ஊடகங்களின் கருத்தும் , மக்களின் கருத்தும் ஒன்றி போனது இந்த படத்தின் வெற்றிக்கு மிக பெரிய அடித்தளமாகும்” என்றார்.
“நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இந்த 150 பட பயணத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனை திரை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கதை வடிவத்தில் இருந்த இந்த அற்புதத்தை திரை வடிவத்தில் கொண்டு வந்தமைக்கு இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு நன்றி” என்று கூறினார்.