ஆர்வத்தைத் தூண்டும் அருள்நிதியின் அடுத்த படம்?

0

 102 total views,  1 views today

ஒரு நடிகரின் மிகப்பெரிய சாதனை என்பது தனக்கென ஒரு தனி எல்லையை வகுப்பது தான். ஒரு சிலர் மாஸ் சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள், வெகு சிலரே வழக்கத்துக்கு மாறான சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அருள்நிதி இந்த இரண்டையும் மிகச்சரியாக தழுவி, பேலன்ஸ் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது படங்கள் மாஸாக அதே நேரத்தில் யதார்த்தமானவையாகவும் உள்ளன. அதனாலேயே அவர் நடிக்கும் படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்படக் கூடிய, பாராட்டப்படக் கூடியவையாக உள்ளன. அது முதுகு தண்டு சில்லிட வைக்கும் டிமாண்டி காலனியாக இருந்தாகும் சரி, அல்லது மிகவும் புத்திக்கூர்மையான இளைஞனாக நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் மௌனகுருவாக இருந்தாலும் சரி. அருள்நிதி குறை சொல்ல முடியாத அளவுக்கு திறமைகளை வளர்த்து கொண்டுள்ளார். இதுவே அவரை இளைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடிக்க வைக்க முக்கியமான காரணம் ஆகும். அருள்நிதி அடுத்து பரத் நீலகண்டன் என்பவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரது புதுமையான கதை தேர்வில் இந்த படமும் ரசிகரகளுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், வரும் நாட்களில் அவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும். 
 
“அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதை கேட்கும் போது அவர் காட்டிய  பேரார்வமும், அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. நல்ல தரமான கமெர்சியல் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு அருள்நிதியின் கதை தேர்வு பிடித்து போய், அவரின் புகழ் அதிகரித்து, அவர்களின் ஃபேவரைட்டாக மாறி இருக்கிறார். நல்ல ஒரு பெருமைமிகு வெற்றிப் படத்தை கொடுக்கும் முனைப்பில், ஒரு தயாரிப்பாளராக மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம்”  என்றார் எஸ்பி சினிமாஸ் சங்கர்.
 
 
 
Share.

Comments are closed.