Saturday, December 14

இசையால் எதையும் வெல்ல முடியும்

Loading

 

பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம்   “ ஒண்டிக்கட்ட “                                                                                                                        

விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                    

ஒளிப்பதிவு   – ஆலிவர் டெனி / இசை   –  பரணி / பாடல்கள்   –  கபிலன்                                                     

பரணி, தர்மா / எடிட்டிங்  –  விதுஜீவா / நடனம்  –  சிவசங்கர், தினா, ராதிகா                            

ஸ்டன்ட்   –  குபேந்திரன் /  கலை   –  ராம்  தயாரிப்பு மேற்பார்வை  – பாண்டியன் தயாரிப்பு  –  மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி                                                                       

எழுதி இயக்கி இருப்பவர் இசையமைப்பாளர் பரணி.                                                                                 

சமீபத்தில் நான் தஞ்சாவூருக்கு போனேன்..அங்கே நான் பயணம் செய்த ஒரு காரில் ஒண்டிக்கட்டை பாட்டு தான் பாடிக் கொண்டிருந்தது..ஒரு படைப்பாளிக்கு அதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும். இசையால் எதையும் வெல்ல முடியும்..

அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை எவரையும் இசையால் கட்டிப் போட முடியும்.. புராண காலங்களில் கடவுள் கூட இசைக்கு மயங்கிய கதைகளை கேட்டிருக்கிறோம்..

இந்த படத்து பாடல்கள் நிச்சயம் எனக்கு இன்னொரு புது வாழ்க்கையை அமைத்து தரும்..

பாடல்கள் மட்டுமில்லை படமும் எனக்கு பேர் வாங்கித் தரும் ..படத்தைப் பார்த்தவர்கள் அத்தனை பேருமே கை தட்டி பாராட்டி இருக்கிறார்கள் என்றார் பரணி..

                                                                                                                                                         

படம் இயக்கியது பற்றி பரணியுடன் பேசிய போது.

இந்த ஒண்டிக்கட்ட படம் ஒரு யதார்த்தமான படம்… ஒரு மெல்லிய நீரோடையில் பயணப்படுகிற மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.. நாம் நாகரிக முலாம் பூசிக் கொண்டாலும் உள்ளுக்குள் கிராமிய சிந்தனைகளே அதிகம் கொண்டவர்கள்..

நகரத்து வாழ்க்கை சலிப்புறும் எவருமே கிராமத்து மண்வாசனையை எதிர்பார்த்து 

ஏங்கி கிடப்பார்கள். இந்த படத்தில் அந்த கிராமத்து எதார்த்தம் இருக்கும்.

எனது முந்தைய படங்கள் பலவற்றின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் என்னையும் என் படத்தையும் கொண்டு சேர்த்தது. இந்த ஒண்டிக்கட்டை படத்தின் பாடல்கள் இப்போதே பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் துண்டு பீடி பாட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.