உலக புகழ்பெற்ற காவியத்தையும் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் படம்

0

Loading

உலக புகழ் பெற்ற காவியத்தையும் – ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்ட கதையை கதையை இயக்கும் “ திருமணம் எனும் நிக்காஹ் “ புகழ் இயக்குநர் அனீஸ் !
 அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற “ திருமணம் எனும் நிக்காஹ் “ என்ற அழகான காதல் கதையை இயக்கியவர் இயக்குநர் அனீஸ். இதைதொடர்ந்து தன்னுடைய அடுத்த கதையை தயார் செய்ய இரண்டு வருடம் எடுத்துக்கொண்டுள்ளார். “ உலக புகழ்பெற்ற காவியத்தையும் , இதுவரை பதிவு செய்யாப்படாத ஓர் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் தமிழின் முதல் திரைப்படம்         புதுமையான த்ரில்லராக உருவாகும் இதில் கன்னடத்தில் மிகவும் பிரபலமான “ லூசியா “ புகழ் நடிகர் சதீஷ் நின்சாம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது தான். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு N. ஷண்முக சுந்தரம் ( ரௌத்திரம் , ஆண்டவன் கட்டளை ,96 )  , படத்தொகுப்பு மு. காசி விஸ்வநாதன்.
  Purple Frames நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கான மற்ற நடிகர் , நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.
Share.

Comments are closed.