சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் , நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நாக.சரவணன் / இசை – கே.கே
எடிட்டிங் – ராஜ்கீர்த்தி / கலை – எஸ்.சுப்பிரமணி
நடனம் – கேசவன் / ஸ்டன்ட் – ஸ்டன்ட் ஜி
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் – மு.ரா.சத்யா
தயாரிப்பு – எஸ்.யசோதா
படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்டோம்.. நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. படம் பார்த்து பார்த்து கற்றுக் கொண்டதும், கேள்வி ஞானம், மற்றும் சினிமா பற்றி நிறைய படித்ததையும் வைத்து இயக்குனராகி இருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன் ஆண்மீகம் பற்றிய புத்தகம், போதை ஒழிப்பு புத்தகம், தன்னம்பிக்கை பற்றிய புத்தகங்களை எழுதி இருக்கிறேன். நான் ஒரு புத்தக புழு. “ என்னோடு நீ இருந்தால் படத்தின் கதை என்னவென்றால் இது ரொமான்டிக் திரில்லர் கதைக்களம்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாயகன் கிஷோர் (மு.ரா.சத்யா ) கோடீஸ்வர பெண்ணான பூஜாவை ( மானசா நாயர் ) காதலிக்கிறான். திடீர்ரென்று ஒரு நாள் பூஜா காணமல் போகிறாள். கிஷோர் அவளை தேடி அலைகிறான். இதற்கிடையே அவனைச்சுற்றி பல்வேறு திகைப்பூட்டும் திகில் நிறைந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை விறு விருப்போடு, மென்மையான காதலை கலந்து சொல்லுகிறது என்னோடு நீ இருந்தால். படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் அமைந்துள்ளன. மேலும் படத்தில் வெறும் காதலை மட்டும் கூறாமல், இன்றைய கால கட்டத்தில் சமூகத்திற்கு தேவையான பெரிய விழிப்புணர்வையும் கொடுக்க உள்ளோம். படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க சென்னையிலேயே நடத்தியிருக்கிறோம் என்றார் மு.ரா.சத்யா.