ஐ.நா சபையில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைக்கு ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்

0

 1,389 total views,  1 views today


ஐ.நா சபையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் இந்தியாவின் பங்களிப்பாக நடந்த நடன நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் கவிதையும் இடம்பெற்றது. அந்தக் கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்.

பரதநாட்டியக் குழுவோடு ‘நடராஜர் ஆராதனை’ என்ற நடனாஞ்சலியில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘அவசரத் தாலாட்டு’ என்ற கவிதைக்கு  ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார். ‘ரத்ததானம்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற அந்தக் கவிதை வேலைக்குச் செல்லும் பெண்களின் துயரம் பற்றியதாகும். இல்லத்தரசிகளாக இருந்த பெண்கள் அலுவலகப் பெண்களாக மாறும்போது இரண்டு சுமைகளையும் அவர்களே சுமக்கிறார்கள்.

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாடும் அவசரத் தாலாட்டாக அந்தக் கவிதையைக் கவிஞர் எழுதியிருக்கிறார். இது இந்தியப் பெண்களுக்கு மட்டுமல்ல உலகப் பெண்களின் அன்றாட அனுபவமாகும்.

உலக மகளிர் தினத்துக்குப் பொருத்தமான இந்தக் கவிதையைத் தேர்ந்தெடுத்து ஐஸ்வர்யா தனுஷ் ஆடியபோது அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கவிதை இதுவாகும் –

 ”சோலைக்குப்பிறந்தவளே!
சுத்தமுள்ள
தாமரையே!
வேலைக்குப்
போகின்றேன்
வெண்ணிலவேகண்ணுறங்கு!

    அலுவலகம்விட்டு

    அம்மாவரும்வரைக்கும்

    கேசட்டில்தாலாட்டு
கேட்டபடிகண்ணுறங்கு!

 

   ஒன்பதுமணியானால்
உன்அப்பாசொந்தமில்லை

    ஒன்பது முப்பதுக்கு
உன்அம்மாசொந்தமில்லை

 

   ஆயாவும்தொலைக்காட்சி
அசதியிலேதூங்கிவிட்டால்

    தூக்கத்தைத்தவிரத்
துணைக்குவரயாருமில்லை!

 

    இருபதாம்நூற்றாண்டில்
என்கருவில்வந்தவளே!

    இதுதான்கதியென்று
இன்னமுதேகண்ணுறங்கு!

 

    தூரத்தில்இருந்தாலும்
தூயவளேஉன்தொட்டில்
ஓரத்தில்  உன்நினைவு
ஓடிவரும்கண்ணுறங்கு!

 

    பேருந்தில்நசுங்கிப்
பிதுங்குகின்ற
வேளையிலும்

    எடைகொஞ்சம்இழந்து
இறங்குகின்றவேளையிலும்

 

    கோப்புக்குள் மூழ்கிக்
குடியிருக்கும் வேளையிலும்

பூப்பூவாய்உனதுமுகம்
புறப்பட்டுவரும்கண்ணே!

    தந்தைவந்துகொஞ்சுவதாய்

    தாய்மடியில்தூங்குவதாய்

    கண்ணானகண்மணியே
கனவுகண்டுநீயுறங்கு!

 

    புட்டிப்பால்குறையவில்லை

    பொம்மைக்கும்பஞ்சமில்லை

    தாய்ப்பாலும்தாயும்இன்றித்

    தங்கம் உனக்குஎன்னகுறை?

 

    மாலையிலேஓடிவந்து

    மல்லிகையேஉனைஅணைத்தால்

    சுரக்காதமார்பும்
சுரக்குமடிகண்ணுறங்கு!

 

    தாயென்றுகாட்டுதற்கும்

    தழுவிஎடுப்பதற்கும்

    ஞாயிற்றுக்கிழமைவரும்
நல்லவளேகண்ணுறங்கு!”

 

ஐ.நா சபையில் அரங்கேற்றப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் இரண்டாவது கவிதை இதுவாகும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே என்ற வைரமுத்துவின் உலக சமாதானப் பாடலை ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆண்டு ஐ.நா சபையில் பாடியிருக்கிறார். நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக எம்.எஸ்.சுப்புலெட்சுமி பாடிய பாடலுக்கும் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்

Share.

Comments are closed.