பேட்லர்ஸ் சினிமா சார்பாக ‘யானை மேல் குதிரை சவாரி’ படத்தை தயாரித்து இயக்கிய இயக்குநர் கருப்பையா முருகன், தனது அடுத்த படத்துக்கு ‘விடியாத இரவொன்று வேண்டும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.
‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’, ‘கோழி கூவுது’ படங்களில் நடித்த அசோக் கதாநாயகனாக நடிக்க, முன்னாள் கதாநாயகி ஆம்னியின் தம்பி மகள் ஹிரித்திகா ஸ்ரீனிவாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும் ‘வழக்கு எண்’ முத்துராமன், ஈ.ராமதாஸ், சௌமியா, முத்துக்காளை, பிரபாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இசை – V.கோகுலகிருஷ்ணா, ஒளிப்பதிவு – வினோத் காந்தி, படத் தொகுப்பு – ப்ரீத்தி மோகன், இணை தயாரிப்பு – R.S. பிரேமலதா, ரேகா கணேஷ்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் கருப்பையா முருகன், “எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும்போது விபத்தில் சிக்கியவர்களை நாம் காப்பாற்றுகிறோமா அல்லது பிரச்சனைகள் வருமென்று ஒதுங்கி போகிறோமா என்பதை பற்றி த்ரில்லிங்காக சொல்லும் படம் இது.
படம் முழுக்க ஒரே இரவில் நடப்பதால், இரவில் மட்டுமே சென்னை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இறுதிக்கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற இருக்கிறது…” என்றார்.