Wednesday, April 23

ஒளிப்பதிவாளர் இயக்குனராகிறார்

Loading

Jomon T John_Dir

மலையாள சினிமா உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான்  ‘கைரளி’ என்ற ஒரு பிரம்மாண்டமான படத்தை  நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார் .

‘சார்லி’, ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘திரா’ போன்ற மலையாள படங்களுக்கும், பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய ‘கோல்மால் 4’ கும் ஒளிப்பதிவு செய்து இந்திய சினிமாவில் புகழ் பெற்றவர் ஜோமோன் T ஜான்.இவரது இயக்கத்தில் இவரது முதல் படமான ‘கைரளி’ 1979’ல் மர்மமான முறையில் மாயமாக 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் ‘MV கைரளி’ பற்றியதாகும்.

தேசிய விருது பெற்ற சித்தார்தா சிவா ‘கைரளி’ க்கு  திரைக்கதை எழுதவுள்ளார். இப்படத்தை நடிகர் நிவின் பாலியின் ‘Jr பிக்ச்சர்ஸ்சுடன் சேர்ந்து ‘ரியல் லைப் ஒர்க்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நிவின் பாலியின் ‘தட்டத்தின் மறயது’, ‘ஒரு வடக்கன் செல்பி’ , ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ படங்களுக்கு ஜோமோன் T ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படப்பிடிப்பு கேரளா, கோவா, டெல்லி  மட்டுமின்றி  குவைத், ஜெர்மனி மற்றும் ஜிபோட்டியிலும் நடக்கவுள்ளது . டிசம்பர் மாதம் இப்படப்பிடிப்பு  தொடங்கவுள்ளது.