‘கடுகு’ படத்தில் நடித்த பாரத் சீனிக்கு சூர்யா, லிங்குசாமி பாராட்டு

0

 624 total views,  1 views today

unnamed (2)(1)
தன்னை  ஒரு படைப்பாளியாக ‘கடுகு’  திரைப்படம் மூலம்  மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றி மற்றும்   சினிமா விமர்சகர்கள், ரசிகர்களின்   பாராட்டுகள் என இவை அனைத்தும், விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தை தந்து இருக்கின்றது. கடுகு படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்த படத்தில்  இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“பாரத் சீனியின் ‘அனிரூத்’ கதாபாத்திரம், நாங்கள் எதிர்பார்த்தததை விட எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்றது. அவருடைய யதார்த்தமான நடிப்பு, சூர்யா சாரை வெகுவாக கவர்ந்து இருப்பது மட்டுமின்றி அவரின் பார்ட்டுகளையும் பெற்று இருக்கின்றது. மேலும் பாரத் சீனி இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர். அந்த வகையில் அவரை ஒரு நடிகராக திரையில் பார்த்த லிங்குசாமி சார், பெரும் மகிழ்ச்சியுற்றார். இவர்களின் பாராட்டுக்கள், பாரத் சீனிக்கு மகிழ்ச்சி மட்டுமின்றி ஊக்கத்தையும், புது உற்சாகத்தையும் தந்திருக்கிறது. அவருடைய நகைச்சுவை பாணியும்,  ஒரு வரி நகைச்சுவை வசனங்களும், ரசிகர்களின் கைதட்டல்களை அவருக்கு பெற்று தந்து இருப்பது, எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் விஜய் மில்டன்.

Share.

Comments are closed.