காபி ஷாப்பில் தயாரான ‘பொன்மாலை பொழுது’ குறும்படம்..!

0

Loading

VIBGYOR க்ரியேடிவ்ஸ் வழங்கும் பொன்மாலை பொழுது என்கிற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்துள்ளார் பிரியாதர்ஷினி. தந்தி டிவி உட்பட சில சேனல்களில் ப்ரீலான்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக, அதன்பின் விளம்பரப்படங்களில் உதவியாளராகவும் பணிபுரிந்த இவரது இயக்குனர் கனவுக்கு ஆரம்ப விதை போட்டுள்ளது இந்த ‘பொன்மாலை பொழுது’ குறும்படம்…

சமீபத்தில் இந்த குறும்படம் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட திருவிழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார் பிரியா. குறும்பட திருவிழாவில் கலந்துகொள்வதற்கான படமாக இதை எடுக்கவில்லை என்றாலும், இதை பார்த்தவர்கள் கொடுத்த உற்சாகத்தினால் விழாவிற்கு அனுப்பியதாக கூறுகிறார் பிரியா.

முன்னாள் காதலர்கள் இருவர் ஏதேச்சையாக ஒரு காபி ஷாப்பில் சந்தித்துக்கொள்கிறார்கள்.. ஆனால் அவர்களின் புது ஜோடிகளுடன். அந்த 15 நிமிட சந்திப்பில் இருவருமே மைன்ட் வாய்ஸ் மூலமாக கடந்தகாலத்தை அசைபோடுகிறார்கள். அதில் என்ன பேசிக்கொள்கிறார்கள்..? அவர்கள் மீண்டும் சேருவார்களா மாட்டார்களா என்பதுதான் இந்த குறும்படத்தின் கதை..

பிரியாவும் அவரது நண்பர் கலேஷும் இதேபோல ஒரு காபிஷாப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்த கான்செப்ட் தோன்றவே, அங்கேயே அமர்ந்தபடி அதற்கான மொத்த வசனங்களையும் பேசி முடிவுசெய்து விட்டார்களாம்.

இந்த குறும்படத்தில் முன்னாள் காதலர்களாக, மோகன் ராஜாவால் தனி ஒருவன் படத்தில் அறிமுகமாகிய த்யேட்டர் ஆர்டிஸ்ட் கலேஷ் ராமானந்த மற்றும் மாடல் லாவண்யா நடித்துள்ளனர்.

இன்றைய காதலர்கள் பெரும்பாலும் பிரிவதற்கு காரணம் வெளியில் எதிர்மறையாக இருக்கும் விஷயங்களை விட அவர்களுக்குள்ளேயே இருக்கும் ஈகோ, எதிர்மறை எண்ணம் தான் உண்மையான காரணம் என்கிற விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் பிரியா.

Share.

Comments are closed.