காமெடி கலாட்டா படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

0

Loading

சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ‘Auraa Cinemas’ , ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில்  நிறைவு பெற்றுள்ளது. ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில்  இந்த படத்தில் நடித்துள்ளனர்.
புதுமுகம்  அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ உருவாகிவருகிறது.
நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்ட’ ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
”ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில் , கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு இயக்குனரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் Auraa Cinemas காவியா மகேஷ்  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாக கூறுவேன் ” என இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் நம்பிக்கையுடன் கூறினார் .
Share.

Comments are closed.