கிரைம் திர்ல்லர் கதையாக உருவாகும் மஞ்சக்காடு!

0

Loading


ரீமேக் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நிஷ்யப்டா 2’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

நிஷ்யப்டா 2’ படம் தமிழில் ‘மஞ்சக்காடு’ என்ற பெயரில் உருவாக இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார். இப்படத்தின் ரீமேக் உரிமையை ரவிபாபு என்பவரிடம் முறைப்படி பெற்று, தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார். அலைன்ஸ் பிக்சர்ஸ் சார்பில் உருவாக இருக்கும் இப்படம் கிரைம் திரில்லர் கதையாக தயாராகி வருகிறது.

இப்படத்தின் கதாநாயகன், நாயகி, பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் படப்பிடிப்பு, டீசர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.

Share.

Comments are closed.