சூப்பர் ஸ்டார் பாராட்டிய ‘தரமணி’

0

Loading

கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும்,  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் மூலம் நடிகராகவும்  அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை  ‘தரமணி’ மகிழ்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது. பெருகி வரும் விமர்சனமும், கூடி வரும் ரசிகர்களும் தரும் ஆதரவை தொடர்ந்து ‘தரமணி’ படத்தின் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது,  மக்களின் ஏகோபித்த வரவேற்பும் பாராட்டும் இந்த படத்துக்கு  வணிகரீதியான பெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
மக்கள்  மத்தியில் ஆதரவு பெற்ற  தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படத்தை நேற்று பார்த்தார். தயாரிப்பாளர் J  சதிஷ் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.” இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்சிரியத்தில் உறைந்தே போனேன். ‘தரமணி’ ஒரு துணிச்சலான படம் (Bold film). என்று கூறினார். படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக பாராட்டினார். படத்தின் வணிக வெற்றியை பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். படத்தின் பெரிய வெற்றியை அவரிடம் கூறியபொழுது கேட்டு மகிழ்ந்தார். ‘தரமணி’ மூலம்  நடிப்பில் காலடி எடுத்துவைத்திருக்கும் எனது நடிப்பையும்  எனது கதாபாத்திரத்தையும் பற்றியும்   விவரமான பேசி பாராட்டினார்.  இது போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகள்  மேலும் தரமான படங்களை தயாரிக்க எனக்கும் எனது நிறுவனத்துக்கும்  பெரும் ஊக்கமாக உள்ளது” என்று உவகையுடனும் உற்சாகத்துடனும் கூறினார் ஜே சதீஷ் குமார்.
Share.

Comments are closed.