ஜெயலலிதா படித்த பள்ளியில் விஷால்

0

 801 total views,  1 views today

 

Tamil Actor Vishal New Photos

 
பள்ளிகளில் கலை விழாக்கள் வருடம்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. இதை போன்ற கலைவிழாக்கள் எல்லா பள்ளிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்றாகும். வெறும் புத்தக கல்வி மட்டும் நமக்கு நல்ல பலனை கொடுக்காது. இதை போன்ற விஷயங்களில் பங்கேற்கும் போது உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம் உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். நான் பள்ளியில் படிக்கும் போது பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். அதை போல் நீங்கள் அனைவரும் உங்களுக்கும் கிடைக்கும் ஒரு மேடையை கூட தவறவிடாமல் அனைத்து மேடையிலும் பங்கேற்க வேண்டும். அப்படி நான் அனைத்து மேடையிலும் பங்கேற்றது தான் எனக்கு இன்று மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது. உங்கள் அனைவருக்கும் மிகசிறந்த ஆசிரியர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்கள் கண்டிப்பாக உங்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாக்குவார்கள். வெளியே இருக்கும் நாங்கள் தங்களை போன்ற மாணவர்கள் இந்த சமூகத்துக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று காத்திருக்கிறோம். இந்த பள்ளியில் மிகப்பெரிய லெஜன்ட்கள் படித்து வந்துள்ளார்கள். அதில் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மற்றொருவர் என்னுடைய நெருங்கிய நண்பர் த்ரிஷா. உங்களுடைய எதிர்காலம் நன்றாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள். எதை செய்தாலும் உங்கள் நெஞ்சிலிருந்து துணிவாக செய்யுங்கள் என்றார் விஷால்.
Share.

Comments are closed.