தயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா

0

 343 total views,  1 views today

தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா.

அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நீலிமா.

அத்துடன் வாணி ராணி, தாமரை,  தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருப்பவர் நீலிமா.

தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

இந்த நிறுவனம் zee தமிழ் தொலைகாட்சிக்காக தயாரிக்கும் நெடுந்தொடர்  “நிறம் மாறாத பூக்கள்” 

முரளி,  நிஷ்மா,  அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கெளதமி ரவி டேவிட் ராஜ்தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்..

இசை           –        விசு

எடிட்டிங்      –        மகேஷ்

ஒளிப்பதிவு  –        அர்ஜுனன் கார்த்திக்

இயக்கம்      –        இனியன் தினேஷ்.

தயாரிப்பு     –        இசைவாணன் ,நீலிமா இசை

வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் மணிக்கு தொடர்ந்து zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

மும்முனை காதல் கதையாக நிறம் மாறாத பூக்கள் உருவாகிறது.

 படப்பிடிப்பு நாகர்கோவில் முட்டம், கன்யாகுமரி போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.

எனது 20 வருட கனவு இதுநானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது.

சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம் என்கிறார்கள் இசைவாணன் – நீலிமாஇசைவாணன் இருவரும்.

 

Share.

Comments are closed.