தளபதி விஜய் பற்றிய” புத்தகம் – “THE ICON OF MILLIONS

0

Loading


தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொருப்பாளர் திரு. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள்  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

“THE ICON OF MILLIONS” என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் “கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் ” என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகம் நிவாஸ் என்பவரால் எழுதப்பட்டு ” THALAPATHY ONLINE FANS ” குரு,ரமேஷ்,மோகன்,வர்ஷா,சீனிவாசன்,மணிகண்டன் ஆகியோர் தலைமையில் இணைந்து திரு.ஹரிஹரன் என்பவரால் இப்புத்தகம் அச்சடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விசிறி படத்தில் நடித்த ராஜ சூர்யா, மெர்சல் பட புகழ் மாஸ்டர் அஸ்வாத் மற்றும் தொழிலதிபர் ரமேஷ் , தமிழகத்தின் அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர்களும் மற்றும் கேரளா,கர்நாடகா, ஆந்திர மாநில விஜய் மக்கள் இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்கள் ரிலீஸ் செய்ய தேசியவிருது பெற்ற எழுத்தாளர் “கலைமாமணி ” திரு.பசுபதி ராஜன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நீதிபதி திரு.டேவிட் அன்னுசாமி ,இந்த புத்தகம் சிறிய வடிவில் இருந்தாலும் பல செய்திகளை உள்ளடக்கியது.

இது ஓர் விஜய் ரசிகனின் படைப்பு.தளபதி விஜய் சமூகத்தில் மேலோங்கி நிற்க்கிறார்.சமுதாயமும் மேலோங்க வேண்டுமென்று நினைக்கிறார் என்பதை இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்க்த்துகளையும் தெரிவித்து உரையாற்றினார்.



Share.

Comments are closed.