‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்

0

 1,036 total views,  2 views today

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்வது என்பது, அனைத்து அறிமுக இயக்குநர்களுக்கும் ஒரு சவாலான காரியம் …. அந்த வகையில், தற்போது ‘U’  சான்றிதழை பெற்று, ரசிகர்களின் பாராட்டுகளை பெற தயாராக இருக்கின்றார்  அஷ்வின் கக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘திரி’ திரைப்படத்தின் இயக்குநர் அசோக் அமிர்தராஜ் .   ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் – ஆர். பி. பாலகோபி தயாரித்து இருக்கும்  ‘திரி’ படத்தை ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருகின்றனர்….. திரி திரைப்படம் தந்தை – மகன் உறவை மையமாக கொண்டு நகரும்.
“தணிக்கை குழுவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, அவர்களிடம் இருந்து U  சான்றிதழை பெறுவது அவ்வளவு எளிதல்ல…. அதுவும் என்னை போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு, அது மிக பெரிய சவால்….தற்போது எங்களின் ‘திரி’ படம் U சான்றிதழை பெற்று இருப்பது, எங்கள் படத்தின் தரத்தை அதிகரித்தது மட்டுமின்றி, படத்திற்கு செலுத்த  வேண்டிய வரி தொகையை குறைத்தும் இருக்கிறது…..” என்று கூறுகிறார் ‘திரி’ படத்தின் இயக்குநர் அசோக் அமிர்தராஜ்.⁠⁠⁠⁠

 

Share.

Comments are closed.

CLOSE
CLOSE