109 total views, 1 views today
பல தமிழ், இந்தி, ஆங்கில படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார்.
தென்னிந்திய திரையுலகில் இருந்து சென்று Indian Summer, Blood Stone, Tropical heat, Inferno, Jungle boy, Provoked போன்ற பல ஹாலிவுட் படங்களைத் தயாரித்தவர். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த ஆங்கில படமான Blood Stone, ஐஸ்வர்யா ராய் நடித்த ஹாலிவுட் படமான Provoked ஆகிய வெற்றிப்படங்ளை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம், ஆகிய திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்தவர். இந்தியில் மாதவன் நடித்த ராம்ஜி லண்டன் வாலே படத்தின் தயாரிப்பாளர்.