சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
‘தில்லுக்கு துட்டு’ படத்தில் மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் ராம்பாலா, எல்லா தரப்பான மக்களும் கொண்டாடக்கூடிய காமெடியை தருவதில் வல்லுநர். அவர் தற்பொழுது நடிகர் ‘கயல்’ சந்திரனுடன் இணைந்து ‘டாவு’ என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார்.
” இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போட்டுள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து ‘டாவு’ படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு ‘டாவு’ தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதரவளித்து வரும் இளைஞர்களுக்கு பிடித்தமான தலைப்பு இது. இந்த தலைப்பை போல் இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் ” என்றார் இயக்குனர் ராம்பாலா.
இந்த படத்தை ‘Two Movie Buffs’ ரகுநாதன் P S அவர்கள் தயாரிக்கிறார். முனீஷ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி மற்றும் மனோபாலா ஆகியோர் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையில், தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், பிரவீன் K L படத்தொகுப்பில் ‘டாவு’ உருவாகவுள்ளது.