நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெறுகிறது – ‘8 தோட்டாக்கள்’

0

 309 total views,  1 views today

IMG_3165
8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு  பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’  –  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும்    ‘8  தோட்டாக்கள்’  திரைப்படத்தை,  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில்  புதுமுகம் வெற்றி – அபர்ணா பாலமுரளி – எம் எஸ் பாஸ்கர் – நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர்.  ஒட்டுமொத்த தமிழக  ரசிகர்களின்  எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தை, வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ‘சக்திவேல் பிலிம் பேக்டரி’ சார்பில்   வெளியிடுகிறார்  சக்திவேல்.
 “எம் எஸ் பாஸ்கர் சாரின் தலை சிறந்த நடிப்பை, மனித உணர்வுகளால் நிறைந்து இருக்கும்  இந்த 8 தோட்டாக்கள் படத்தில் காணலாம். வயதான பிறகு நம் பெற்றோர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி  இருக்கின்றது 8 தோட்டாக்கள். நிச்சயமாக இந்த படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார் துருவங்கள் 16 படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன்.
“இயக்குனர் ஸ்ரீ கணேஷின் ஓர்  உன்னதமான படைப்பு தான் இந்த 8 தோட்டாக்கள். இந்த படத்தில் நடித்து இருக்கும் எல்லா நடிகர்களின் நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் இசையும்  என்னை பெரிதளவில் கவர்ந்துவிட்டது. நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படமாக 8 தோட்டாக்கள் இருக்கும்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு
“அனைவரையும் கவர கூடிய விதத்தில் இந்த 8 தோட்டாக்கள் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகிற்கு உத்வேகம் அளிக்க கூடிய ஒரு படமாக இந்த திரைப்படம் இருக்கும்” என்று கூறுகிறார் இயக்குநர் சசி.
“நான் என் வாழ் நாளில் பார்த்த மிக  சிறந்த படங்களுள் ஒன்று – 8 தோட்டாக்கள். இது முழுக்க முழுக்க இயக்குநர் ஸ்ரீ கணேஷன் 100 சதவீத உழைப்பாலும், அர்பணிப்பாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் ஓர் தனித்துவமான  அடையாளத்தை இந்த படம் பதிக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE