கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம். “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது . கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார், இதன் இயக்குநர் L.சுரேஷ் . இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 – அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளது.
படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். வித்தியாசமான வேடம் அவருக்கு . இரண்டு வித பரிமாணத்தில் கண்டிப்பாக அசத்துவார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைப்பெற்றது. தொடர்ந்து , தலக்கோணம் , சென்னை , மதுரை , கொடைக்கானல் , சாலக்குடி பகுதிகளில் நடைபெறும். அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக சுமார் 10 – கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.
திரையுலகில் பலவருடங்கள் தயாரிப்பு துறையில் அனுபவம் பெற்ற இவர் தயாரிக்கும் முதல் படம் இது.
கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் – ட. சுரேஷ். இவர் “எத்தன்” படத்தை இயக்கியவர்.
இசை : ஷபிர்
ஒளிப்பதிவு : இராஜவேல் மோகன்.
எடிட்டிங் : சௌமி கிருஷ்ணன்
கலை : ஐயப்பன்
ஸ்டண்ட் : ஸ்டண்ட் ஜிஎன்
நடனம் : கலா , விஜி
பாடல்கள் : கபிலன் , பவன் மித்ரா , மோகன்ராஜ்
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் : ஆக்சல் மீடியா (ACCEL MEDIA)
மக்கள் தொடர்பு : ஜான்சன்.