ஒரு குறிப்பிட்ட கதாநாயகன் உடன் ஒரு குறிப்பிட்ட கதாநாயகி நடித்தால் அந்த படம் பற்றிய யூகங்களும் செய்திகளும் உச்சத்தில் பறக்க வைக்கும். அப்படி சமீபத்தில் உச்சத்தில் பறக்கும் படம் தான் ஜெய் – அஞ்சலி இணையாக நடிக்கும் “பலூன்”.புதிய இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், 70 எம் எம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions தயாரிக்க, உலகெங்கும் ஆரா சினிமாஸ் வெளி இட இருக்கும் “பலூன்” படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர்.
“என்னுடைய கதாபாத்திரம் 1980க்களின் பிண்ணனியில், கொடைக்கானல் வாழும் ஒரு பெண்ணை பற்றியது. மிகவும் கட்டு கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் “மூன்றாம் பிறை” ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அந்த நடிப்புக்கு ஈடு, இணை ஏது , வரவே முடியாது என்றும் நாங்கள் பேசி கொண்டோம்.ஆயினும் நான் நடிக்கும் போது, ஸ்ரீதேவி மேடம் அவர்களின் நடிப்பை பார்த்து வந்த உந்துதல் என்னை சிறப்பாக நடிக்க வைத்தது எனலாம்.என்னை வெகுவாக கவர்ந்த கதா பாத்திரம் இது என்று சொல்லலாம்.ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என்று உறுதியுடன் கூறுகிறார் ஜனனி ஐயர்.