பார்த்திபனின் கிறுக்கல்கள்

0

 273 total views,  1 views today

எத்தனை முறை படித்தாலும் சலிக்காத, மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டும் படைப்பு  நடிகரும் இயகுநருமான ஆர்.பார்த்திபனின் கிறுக்கல்கள்.
பலரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டு,  அதற்கு குப்பைக் கதை என்று பெயர் வைப்பதைப்போல, தனது உரத்த சிந்தனைக்கு அச்சு வடிவம் கொடுத்து நூலாக்கும்போது அதற்கு கிறுக்கல்கள் என்று பெயரிட்டிருக்கிறார் பார்த்திபன்.
பிரபல வார இதழுடன் இணைந்து எடுத்த இந்த நூலாக்க முயற்சியில் கிடைக்கும் லாபம் முழுவதுமே பார்த்திபனின் மனித நேய மன்றத்தின் சமூகப் பணிகளுக்கே என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டதால், படித்து ரசித்த பலரும் தங்கள் நண்பர்களின் பிறந்த நாளுக்கும் திருமண நாளுக்கும் பரிசாக வழங்கி அவர்களையும் மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்தார்கள்.
பிரபலமான பேரறிர்கள் சொல்வதுதான் பொன் மொழிகள் நான் எழுதுவது செப்பு மொழிகள் என்று கவியரசு கண்ணதாசன் சொல்லிவிட்டு எழுதியவையெல்லாம் காலம் கடந்து இப்போதும் நிற்கின்றன.
அதேபோல் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது படைப்புக்கு கிறுக்கல்கள் என்று பெயரிட்டிருந்தாலும், அழகான சொற்சித்திரங்களாகத்தான் அவை அமந்திருக்கின்றன என்பது படித்துப் பார்த்தவர்களுக்குப் புரியும்.
Above all இந்த நூலுக்காக நாம் செய்யும் செலவு ஒரு நல்ல காரியத்துக்குப் போகிறது என்பதுதான். If not we who?  If not now when?

பார்த்திபனின் கிறுக்கல்கள் அமேசான் வலைதளத்திலும் இப்போது கிடைக்கிறது எனபது கூடுதல் தகவல்.

Share.

Comments are closed.