பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக
“பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது.
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷ்ன்ஸ் S.N.ராஜராஜன் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட்
பட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு துறையில் முதன் முறையாக கால் பதிக்கிறார்.
மற்ற முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்யா
இசை : யுவன்சங்கர்ராஜா
கலை : தியாகராஜன்
எடிட்டிங் : மணிக்குமரன்
எழுதி இயக்குகிறார் இளன். இவர் பல குறும்படங்களை இயக்கியதுடன் கிருஷ்ணா நடித்து விரைவில் வெளிவர உள்ள கிரகணம் என்ற படத்தை இயக்கியவர்.
தயாரிப்பு – S.N.ராஜராஜன் , யுவன் சங்கர்ராஜா.
படத்தின் பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப் பட உள்ளது.
சமீபத்தில் மலேசியா சென்ற யுவன்சங்கர்ராஜா இயக்குனர் இளன் தயாரிப்பாளர் எஸ்.என். ராஜராஜன் ஆகியோர் படத்திற்கான எல்லா பாடல்களையும் கம்போசிங் செய்து முடித்து சென்னை திரும்பினர்.
உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே காதலை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லப் பட்ட படங்கள் தான்…
அந்த படங்களில் இசையும் மக்களை தியேட்டருக்கு இழுத்த முக்கிய காரணமாக இருந்திருக்கிறது..
அந்த பார்முலாவில் உருவாகும் படமே “ பியார் பிரேமா காதல் “
காதலை இந்தியில் பியார் என்றும் தெலுங்கில் பிரேமா என்றும் தமிழில் காதல் என்றும் டைட்டில் வைத்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர் இளன்..
படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது
ஒரு நல்ல காதல் கதை. கிடைக்காதா என்று காத்திருந்த எனக்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த கதை இது.
பாடல்கள் மெருகேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார் யுவன் சங்கர்ராஜா.