பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “

0

 766 total views,  1 views today

IMG_7138

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்   பிரபுதேவா நாயகனாக நடிக்கும்  எங் மங் சங் “  படத்தை தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.

இந்த படத்தில் தங்கர்பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார். மற்றும் R.j. பாலாஜி ,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா) ,சித்ராலட்சுமணன்,கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

ஒளிப்பதிவு   –   ஆர்.பி.குருதேவ்  ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.

இசை    –  அம்ரீஷ் ..இவர் விரைவில் வர உள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு இசை அமைத்துள்ளார்

கலை   –  ராஜன்.D

தயாரிப்பு மேற்பார்வை…ஆர்.பி.பாலகோபி

தயாரிப்பு   –  கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –   எம்.எஸ்.அர்ஜுன்.

இந்த படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது .

விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு, டி.சிவா, காட்ரகட்ட பிரசாத், அருள்பதி, எல்.எம்.எம்.சுவாமிநாதன், கோபிநாத் ஒளிப்பதிவாளர், இயக்குனர் மணிகண்டன், கிருஷ்ணா ரெட்டி, அம்ரீஷ், கும்கிஅஸ்வின், எஸ்.ஆர்.பிரபு, செய்யாறுரவி, ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், நித்யானந்தம் இயக்குனர், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி,பாடலாசிரியர்  விவேகா, கே.விஜயகுமார், கபார், கோகுல்நாத், சித்ராலட்சுமணன், பிரமீட் நடராஜன், தளபதி, பாடலாசிரியர் சொற்கோ, இயக்குனர் மோகன்ராஜா, தனஞ்செயன், பிரமீட் சாமிநாதன், வெங்கட், ஜி.சிவா, ரோபோசங்கர், டி.ஜி.தியாகராஜன், பாபு ஒளிப்பதிவாளர், கில்டு ராஜா, டாக்டர் சூரி, தயாரிப்பாளர் அழகர், ராதா கிருஷ்ணன், ஜோதி, இயக்குனர் சுந்தர்.சி,  விச்சு, கல்யான் இயக்குனர், தேனாண்டாள் முரளி, சிவசக்திபாண்டியன், ஹச்.முரளி, பாண்டி ரவி, பஞ்சுசுப்பு, எ.எம்.ரத்னம், கே.ஆர், கதிரேசன், கே.பாலு, சோழாபொன்னுரங்கம், ரவீந்தர், எஸ்.எ.சந்திரசேகர், வி.எ.துரை, கே.முருகன், கே.முரளிதரன், பி.டி.செல்வகுமார், ஆர்.வடிவேலு, பொன்குமரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினரை  வாழ்த்தினார்கள்.  விழாவிற்கு வந்தவர்களை தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் மற்றும் படத்தின் இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன், தயாரிப்பு நிர்வாகி பாலகோபி ஆகியோர் வரவேற்றனர்.

Share.

Comments are closed.