பூமராங் படத்துக்காக அதர்வா கொடுத்த ஒத்துழைப்பு…

0

Loading

 

திரைப்படத் தயாரிப்பி்ல் ஈடுபட்டிருக்கும் பலரும் சொல்வது போட்ட முதல்கூட திரும்ப கைக்கு வரவில்லை என்பதுதான். லாபத்தை ஈட்டும் முதல் படியே நஷ்டத்தைத் தவிர்ப்பதுதான். அதாவது எந்த ஒரு பொருளாக இருந்தாலும், கவனமாகத் திட்டமிட்டு அதன் உற்பத்திச் செலவைக் குறைத்தால், நஷ்டத்தைத் தவிர்த்து குறைந்த பட்ச லாபத்துக்கு வழி வகுக்கலாம்.
சரியான திட்டமிடலுடன் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, குறித்த காலத்தில் படத்தைத் திரைக்கொண்டு வந்து வெற்றிப் படமாக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் ஆர். கண்ணன்.
இவன் தந்திரன் படத்தைத் தொடர்ந்து தற்போது அதர்வா நடிக்கும் பூமராங் பட்தை மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கி வருகிறார்.
சமீபத்தில் கண்ணனை சந்தித்தபோது, என்ன நீங்களும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஆரம்பித்து விட்டீர்களே என்று கேட்டோம்.
என் வழக்கப்படி நான் நல்ல தமிழ்ப் பெயரைத்தான் வைக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஆத்ஷன் படத்துக்கு பூமராங் என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக இருந்ததால் அதையே வைத்து விட்டேன்.
அதர்வா மூன்று வித்தியாசமான தோற்றத்தில் இந்தப் படத்தில் வருகிறார். மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா ஆகோயோர் பூமராங் படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களின் பனிரெண்டு மணி நேர உழைப்புதான் அதர்வாவுக்கு இந்த வித்தியாசமான தோற்றப் பொலிவுகளைக் கொடுத்திருக்கிறது.
முழுப்படமும் தன்னைச் சார்ந்தே இருப்பதை உணர்ந்து கொண்ட அதர்வா, மிகக் கடுமையான உழைப்பை முகஞ் சுளிக்காமல் வழங்கியதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நான்கு வெர்ஷன் திரைக்கதை இருந்ததால் ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் எடுக்கலாம் என்று திட்டமிட்டபோது, படப்பிடிப்புக்கு தொன்னூறு நாள்கள் தேவைப்படும் என்று உத்தேசமாகக் கணக்கிட்டோம். ஆனால் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பால் நாற்பத்தைந்து நாள்களிலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம். சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியதோடு, அந்தமானில் சில காட்சிகளையும் ஒரு பாடலையும் படமாக்கியிருக்கிறோம் என்றால் பாருங்கள், நட்சத்திரங்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு எங்களுக்கு கிடைத்திருக்கும் என்று.
சுஹாசினி மணிரத்னம், சதீஷ், ஆர் ஜே பாலாஜிஆகியோரும் அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
பின் தயாரிப்புப் பணிகளுக்கு அறுபது நாள்கள் எடுத்துக் கொண்டு ஆகஸ்ட் மாதம் பூமராங் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறோம் என்றார் இயக்குநர் கண்ணன்.

Share.

Comments are closed.