தென் இந்தியாவில், குறும்படங்களை தயாரிப்பதில், முன்னணி நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனம், தொடர்ந்து தரமான குறும்படங்களை ரசிகர்ளுக்கு வழங்கி வருவது மட்டுமில்லாமல், திறமையான கலைஞர்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. இவர்களின் அடுத்த படைப்பு, அரவிந்த் ஐயர் இயக்கி இருக்கும் ‘மதிகெட்டான் சோலை’.
வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதிலை தேடி அலைகிறார் ஒரு எழுத்தாளர். அவரின் தேடல் எங்கே சென்று முடிகிறது என்பது தான் இந்த 13 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘மதிகெட்டான் சோலை’ குறும்படத்தின் ஒரு வரி கதை.