836 total views, 1 views today
பல தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி, தென் இந்தியாவில் குறும்படங்களை விளம்பரம் செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, தற்போது ‘சாத்தான்’ என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஜய் சுப்பிரமணியன் இயக்கி இருக்கின்றார். உலகமெங்கும் தொழில் நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும் இந்த காலக் கட்டத்தில், கை பேசி மிகவும் அவசியமாகிவிட்டது. அந்த கை பேசி நல்லவர்கள் கையில் கிடைத்தால் நல்லது மட்டும் தான் நடக்கும், ஆனால் அதுவே தீயவர்கள் கிடைத்தால்???? இது தான் இந்த சாத்தான் குறும்படத்தின் ஒரு வரி கதை.
Link – https://youtu.be/Pil6XPSiXj4