Friday, December 13

‘பொங்கல் பாடலை’ வெளியிடுகின்றது ‘டூப்பாடூ’

Loading

தைத்திருநாளை கொண்டாடும் வகையில் ‘பொங்கல் பாடலை’ வெளியிடுகின்றது ‘டூப்பாடூ’. எடிசன் விருதை வென்ற பிரபல பாடகர் வேல்முருகன் இந்த பாடலை எழுதி, இசையமைத்து பாடி இருக்கிறார். நெய்வேலியில் பிறந்து, ‘சுப்ரமணியப்புரம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த வேல்முருகன், ‘ஆடுங்கடா மச்சான்’, ‘பலே பாண்டியா’, ‘ஒத்த சொல்லால’ என பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து, ரசிகர்களிடம் அமோக பாராட்டுக்களை பெற்றவர்.
பொங்கல் திருநாளில் இசை பிரியர்களின்  மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க, வேல்முருகனோடு கைக்கோர்த்து இந்த பாடலை வெளியிடுகிறது ‘டூப்பாடூ’. வேலுமுருகனின் குரலிலும், அவர் பயன்படுத்தி இருக்கின்ற இசை கருவியின் இசையிலும் உருவாகி இருக்கின்ற  ‘பறை’ என்ற இந்த பாடல், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், பெருமையையும் எடுத்துரைக்கும்.
இந்த ஜனவரி மாதம் முடியும் வரை, ஒவ்வொரு வாரமும் வேல்முருகனின் பாடல் ‘டூப்பாடூ’ இசைத்தளத்தில் பிரத்யேகமாக வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.