மதுரை சுற்று வட்டார பகுதிகளில் “நாடோடிகள் – 2”

0

 268 total views,  2 views today

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் “நாடோடிகள் – 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்  அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்… இப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளுவர் அருகே (26/01/18) அன்று நடைபெறுகிறது… இசை  -ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – ஏகாம்பரம், கலை – ஜாக்கி, எடிட்டிங் –  ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம் – திணேஷ், ஜானி, தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE