மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக வெளியாகவுள்ள ‘அறம்’

0

 311 total views,  1 views today

பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள்  இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை. மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அறம்’ படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும்.
இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ்,  பிரம்மாண்ட  விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன. ” ‘அறம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாரா அவர்களின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வதே சரி”  என்கிறார்  ‘KJR ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் J கொட்டப்படி. தென்னிந்திய சினிமாவில்  பெண் கதாபாத்திரத்தை  மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இது ஒரு மிக முக்கிய படமாக கருதப்படுகிறது. KJR ஸ்டுடியோஸும் ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்களும் இணைந்து  இப்படத்திற்கான மேலும் பல பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தைய வெற்றி படங்களில் பல படங்களை வெளியிட்டது ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில்,ஆண்டனியின் படத்தொகுப்பில், ஜிப்ரானின் இசையில் ‘அறம்’ உருவாகியுள்ளது.
Share.

Comments are closed.