ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிய பிரபாஸ்

0

 217 total views,  1 views today

S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது.
இந்த நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
“எங்களின் “பாகுபலி 2″ படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நாள் எனக்கு ஒரு சிறப்புமிகு நாள். இந்நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது அன்பை காணிக்கையாக்குகிறேன். இந்த அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான என் பயணத்தில் ஒரு பகுதியாக நீங்கள் இருந்ததற்கு நன்றி. இயக்குனர் S.S.ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு எனது மரியாதைகளும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார் நடிகர் பிரபாஸ்
பாகுபலி, பாகுபலி 2 படங்களின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் சாஹூ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share.

Comments are closed.