விரைவில் வெளியாகிறது “ ஒரு கனவு போல “

0

 990 total views,  2 views today

IMG_1068

இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் ஒரு கனவு போல “   இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, வெற்றிவேல் ராஜா, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.  கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.                                            ஒளிப்பதிவு   –   அழகப்பன்.N  இவர் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். அதில் 40 படங்களின் மூலம் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.                                                                                                                                          

புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன் பாடல்களுக்கு E.S.ராம் இசையமைக்கிறார்.                                                                                                                      

கலை    –  M.D.பிரபாகரன்எடிட்டிங்   –   சாபு ஜோசப்  / ஸ்டன்ட்  –  B.தியாகராஜன்                                                                                                                                                                                                                                                                                                                  நடனம்   –  எஸ்.எல்.பாலாஜி  /ஆடியோகிராபி  –  ஜி.தரணிபதி                                                                                                                                                                                             

தயாரிப்பு மேற்பார்வை   – எம்.செந்தில்                                                                                      

தயாரிப்பு   C.செல்வகுமார்                                                                                                          

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்      –    V.C.விஜய்சங்கர்                                            

படம் பற்றி இயக்குனர் கூறியது… 

மனிதனின் இதயத்தில் ஏற்படும் வன்முறையான எண்ணங்களை, வெளியிட முடியாத உணர்வுகளை நாமே புரிந்து கொண்டு சமூக நீதிக்கு ஏற்ப நம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.  என்பதை உளவியல் ரீதியாக உணர்த்தும் திரைப்படம் இது. நட்பின் ஆழத்தையும் – கற்பின் அர்த்ததையும்  இந்த திரைப்படத்தில்  அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். பெண்மையின்  உள் உணர்வுகளை இதில்  அதிகமாக  அலசி இருக்கிறோம்.

இதுவரை சொல்லப் படாத விதத்தில் திரைக்கதையின் பயணம்  இருக்கும். படத்தில் எல்லா இடங்களிலும் பாசிட்டிவான விஷயங்களே நிறைந்திருக்கும் என்றார் இயக்குனர் V.C.விஜய்சங்கர்.

Share.

Comments are closed.