553 total views, 1 views today
தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கும் . அவ்வாறான இவர் தனது அடுத்த படத்தின் விவரங்களையும் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார் .
T.சிவா’ வின் ‘அம்மா கிரேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ‘பார்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலன் ‘அம்மா கிரேஷன்ஸ் ‘ தனது 25 ஆம் ஆண்டில் அடிவைக்க உள்ளது.
இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு ‘பார்ட்டி ‘ என படத்திற்கு பெயரிட்டுள்ளதால் , அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். இதில் பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார். KL பிரவீன் எடிட்டிங் செய்யவுள்ளார் .
இப்படத்திற்க்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ஒன்று சேர்த்துள்ளார். சத்யராஜ் , நாசர் ,ஜெயராம் ,ரம்யா கிருஷ்ணன் ,ஜெய் ,ஷிவா , சம்பத் , ‘கயல் ‘ சந்திரன் ,ரெஜினா கசன்டரா ,சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ‘பார்ட்டி’ யில் கலக்க உள்ளனர். ” ‘பார்ட்டி ‘ யின் படப்பிடிப்பு பிஜி தீவில் நடக்கவுள்ளது .’சரோஜா ‘ மூலம் எனக்கு இரண்டாவது தாய்வீடான அம்மா creations நிறுவனத்துக்காக இப்படத்தை இயக்குவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ‘பார்ட்டி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ” என கூறினார் இயக்குனர் வெங்கட் பிரபு.