அமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய்!

0

 231 total views,  2 views today

இயக்குனர் அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி. மோகன் தற்போது பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். 
ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
எஸ்.பி.மோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு நான்கு தேர்ந்த எழுத்தாளர்கள் திரைக்கதையும், இரண்டு வசனகர்த்தாக்கள் வசனங்களையும் எழுதியுள்ளனர். 
திருமணமான ஒரு ஜோடியின் முதல் வாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழில் வெளிவரவிருக்கும் முதல் மாய எதார்த்த திரைப்படம் என்றும் இப்படம் அனைவராலும் விரும்பத்தகும் அளவுக்கு ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் தெரிவித்துள்ளார்,.
*விஜய் டிவி மா.கா.பா ஆனந்த் நடித்திருக்கும் வித்தியாசமான படம்: பஞ்சுமிட்டாய்*
விஜய் டிவி புகழ் ம.கா.பா ஆனந்த், தொடர்ச்சியாக சில படங்களில் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
முன்னதாக கிருஷ்ணாவுடன் இணைந்து ‘வானவராயன், வல்லவராயன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த மா.கா.பா ஆனந்த் தற்போது, நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலருடன் இணைந்து நடித்துள்ள  படம் பஞ்சுமிட்டாய்.
இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குனர் அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி.மோகன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 
பெரும் எழுத்தாளர் பட்டாங்கள் திரைக்கதையும் வசனமும் இப்படத்துக்கு எழுதியுள்ளனர். முதல் மாய எதார்த்த திரைப்படமாக குறிப்பிடப்பட்டுள்ள இப்படம் எல்லா விதமான உணர்ச்சிகளும் கலந்து சுவாரசியமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கிறது என்றும், அனைவரையும் கவரும் ஜனரஞ்சகமான திரைப்படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
*வண்ணத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் ‘பஞ்சுமிட்டாய்’!*
நிறம் என்பது கண்களுக்கு புலப்படும் புறக்காரணி. நம் கண்களில் உள்ள கருவிழி தனக்கே உரிய நிற உணர்விகளால், எது எந்த நிறம் என்பதை உணர்ந்து அதனை மூளைக்கு அனுப்புகிறது. ஆனாலும் பலருக்கும் நிறக்குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக பேஸ்புக் அதிபர் மார்க் என்பவருக்கு , நீல நிறத்தை மட்டுமே நன்றாக நிற உனர்விகளால் உணர முடியும். அதுவே அவரது கண்களை எரிச்சலூட்டாத நிறமாம். எனவேதான் பேஸ்புக் நீலநிற த்தில் உள்ளதாம். சிலருக்கு சிவப்பைப் பார்த்தால், பச்சையாகவும், சிலருக்கு பச்சையைப் பார்த்தால் சிவப்பாகத் தெரியும்.
ஆனால் உண்மையில் இந்தத் தவறுகள் காணும் காட்சிப்பொருளிலோ, அல்லது காண்பவரின் கண்களிலோ நிகழுவதில்லை. அப்படித் தெரிவதற்கான மனோவியல் காரணமும் இருக்கிறது என்று கூறுகின்றனர். 
இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் விரைவில் வெளியாகவிருக்கும் ’பஞ்சுமிட்டாய்’. மாய எதார்த்தப் புனைவு ரக திரைப்படமான இப்படத்தில், ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி.மோகன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிகவும் அரிதாக நான்கு திரைக்கதை எழுத்தாளர்களும், இரண்டு வசனகர்த்தாக்களும் பணிபுரிந்துள்ள இப்படம் வரும் June 1 திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
*குழந்தைகளுக்கு பிடித்தமான படத்தின் தலைப்பு: பஞ்சுமிட்டாய்.!*
பொதுவாகவே குழந்தைகளுக்கு கம்மர்கட், தேன்மிட்டாய், ஐஸ் கிரீம், நாவல் பழம் என ஏகப்பட்ட விஷயங்கள் பிடிக்கும். இதுபோன்ற விஷயங்களை பல திரைப்படங்களுக்கு தலைப்பாகவும் வைத்துள்ளனர். 
உதாரணமாக ஜிகர்தண்டா,கம்மர்கட், பூவரசம் பீப்பி, ஆரஞ்சு மிட்டாய் உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் மீண்டும் குழந்தைகளுக்கே பிரியமான தலைப்புடன் வரும் June 1 வெளிவரவிருக்கும் திரைப்படம் பஞ்சுமிட்டாய்.
அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி.மோகன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான தலைப்பாக இருந்தாலும், அனைவருக்குமான இப்படம் கணவன் மனைவியின் வாழ்க்கையில் எதார்த்தமாக  நடக்கும் ஒரு ‘மாயாஜாலத்தை’ திரையில் சுவைபடச் சொல்லவிருக்கிறது.
*இரண்டு ஹிட் குறும்படங்கள் ஒரு படமாகின: பஞ்சுமிட்டாய்!*
யூ டியூபில் நாம் நிறைய குறும்படங்களைப் பார்த்திருப்போம். அதில் கலர்ஸ் என்ற குறும்படம் மிகவும் புகழ்பெற்றது.  பெரும் இயக்குனர்களால் பாராட்டைப் பெற்ற இக்குறும்படத்தினை இயக்கிய எஸ்.பி.மோகன் தனது இன்னொரு குறும்படத்தின் கருவையும் கலர்ஸ் குறும்படத்தின் கருவையும்  இணைத்து  ‘பஞ்சுமிட்டாய்’ என்று ஒரு பெரும் படத்தை இயக்கியுள்ளார். 
ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
முற்றிலும் புதிய பரிமாணத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்கரு பலராலும் ரசிக்கப்படும் வகையில் சுவாரசியம் குன்றாமல்  திரைக்கு வரவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
*தமிழ் சினிமாவில் புதுரக ஜானரில் ’பஞ்சுமிட்டாய்’!*
தமிழ் சினிமா எவ்வளவோ வித்தியாசமான கதைக்களங்களை பார்த்துள்ளது. கிரைம், ஆக்ஷன், திரில்லர், ஹாரர், குடும்பத்திரைப்படம், வரலாற்றுத்திரைப்படம், காவியத் திரைப்படம் , மாயாஜாலத்திரைப்படம் என எவ்வளவோ ஜானர்களைக் கண்டுள்ளது. 
 
எனினும் புதுப்புது இயக்குனர்களால் புதுப்புது ஜானர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள ’பஞ்சுமிட்டாய்’ முற்றிலும் புதிய ஜானராக வரும் June 1 அன்று வெளிவரவிருக்கிறது.
அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி.மோகன் இப்படத்தை எழுதி இயக்க, ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
நாயகனுக்கும் நாயகிக்குமான கணவன் மனைவி உறவில் நிற மாயத்தால் ஏற்படும் சிக்கலை சுவைபடச் சொல்லியிருக்கும் இப்படம் ‘மேஜிக்கல் ரியலிஸம்’ எனபடும் மாய எதார்த்தத் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
 
Share.

Comments are closed.