காமெடி நடிகர் மயில்சாமி மகன் ஹீரோவாக அறிமுகமாகும் திரிபுரம்.

0

 829 total views,  1 views today

_BLN9455-Resized
இந்த உலகை முழுக்க நல்லதாகவே மாற்ற முடியாது. அதேபோல் உலகை முழுக்கவே கெட்டதாகவும் மாற்ற முடியாது என்ற மெசேஜோடு உருவாகி வெளிவரவிருக்கும் படம் திரிபுரம். இந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆகிய வேதமணியிடம் படம் குறித்து கேட்டோம்.
’ஹாரர் த்ரில்லர் சின்ன மெசேஜுடன் படத்தை எடுத்திருக்கிறோம்.  கர்மவினை என்பது நம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது.   நகரத்தில் வாழும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டுகள் தான் படத்தின் கதை.  நான்  20 ஆண்டுகளாக திரைத்துறையில் தான் இருக்கிறேன். நான் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறேன்.   கடும் போராட்டத்துக்கு பிறகு நானே தயாரித்திருக்கிறேன். 
பின்னணி இசை கோர்ப்பு பணி நடக்கிறது. அடுத்த மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும். விரைவில் இசை வெளியீடு நடக்கும்’ என்றார்.
  ஹீரோ – அன்பு மயில்சாமி ( மயில்சாமி மகன்)
ஹீரோயின் – பிருந்தா
மற்றும் சசிக்குமார், சாம்ஸ், மனோபாலா, லொள்ளுசபா சாமிநாதன், பிச்சைக்காரன் தர்ஷ்யன், மந்திரவாதியாக வில்லி வேடத்தில் மானாட மயிலாட நிகாரிகா, நரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 
கேமரா – ஹாஃபிஸ் எம் இஸ்மாயில்
இசை – கணேஷ் சந்திரசேகரன்
எடிட்டிங் – முகேஷ் ஜி முரளி
மேனேஜர் – தண்டபாணி
ஆர்ட் – மணிமொழியன் ராமதுரை
நடனம் – சஜ்னா நஜம்
பாடல்கள் – மோகன்ராஜன், சத்யசீலன்
இணை தயாரிப்பு – சுஷ்மா வேதமணி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – வேதமணி
இந்த படத்தின் பாடல்களை கேட்டுவிட்டு யுவன் ஷங்கர் ராஜா தனது ஆடியோ நிறுவனம் மூலம் இசையை வெளியிட முன்வந்திருப்பது படத்தின் சிறப்பு.
photo (1) photo (2) photo (3) photo
Share.

Comments are closed.