Wednesday, October 28

சமீபகால அரசியலை தோலுரித்த சிம்புவின் குரல்!!

Loading

 

ரமேஷ் தமிழ்மணி இசையில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ளது ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பம்.

இந்த பாடலை சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடலின் முன்னோட்டமாக 45 நொடிகள் நிறைந்த ஆல்பத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

இப்பாடலின் வரிகள் சமீப கால அரசியலை தோலுரிக்கும்படியாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.

முழு பாடலையும் கேட்க ஆவலாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு மேலாக அரசியல்வாதிகள் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் இப்பாடல் வெளிவர உள்ளது.

தீபன் பூபதி இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளனர்.