Friday, November 20

சிலுக்குவார்பட்டி சிங்கமாக சிலிர்த்துக் கிளம்பும் விஷ்ணு விஷால்

Loading

விஷ்ணு விஷால் தனது சொந்தப்பட நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து நடித்திருக்கும் சிலுக்குவார் பட்டி சிங்கம் இம்மாதம் 21ஆம் தேதி முதல் உலகெங்கும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

ரெஜினா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஓவியா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த் ராஜ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ராட்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிலுக்குவார்பட்டி சிங்கமாக விஷ்ணு விஷால் சிலிர்த்துக்கொணடு கிளம்பியிருக்கும் இப்படம், அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.