Friday, May 1

தமிழ்ப் படவுலகின் புதிய இரட்டை இயக்குநர்கள்

Loading

கிருஷ்ணன்- பஞ்சு, தேவராஜ் -மோகன், சக்தி- கண்ணன் என்று பல இரட்டையர்களை தமிழ்ப்படவுலகம் கண்டிருக்கிறது. இந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்திருக்கும் இரட்டையர்கள் மேக்வென். பெயரைப் பார்த்ததும் ஹாலிவுட்டிலிருந்தோ வடஇந்தியாவிலிருந்தோ வந்த இரட்டையர்கள் என்று எண்ணிவிடாதீர்கள்.
இதயத்தால் இணைந்த தங்களை ஒரு சின்ன கோடுகூட பிரித்து விடக்கூடாது என்று எண்ணி மேக்வென் என்ற புதிய நாமகரணத்தை சூடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது மகேஷ் என்ற இளைஞரும் வெங்கட் என்ற இளைஞரும் இணைந்து தங்கள் பெயரில் உள்ள முதல் மூன்று ஆங்கில எழுத்துக்களை இணைத்து மேக்வென் என்றாகியிருக்கிறார்கள். இதற்காகவே இவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.
இந்தியாவின் பெரும் மாநகராட்சி ஒன்றில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையின் பின்புலத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதைக்களத்தில், அரசு இயந்திரத்தின் அலட்சியப்போக்கை ஆழமான சமூகப் பார்வையுடன் பதிவு செய்யவிருக்கிறார்கள் இந்த இரட்டையர்கள்.
பரதன் பிக்சர்ஸ் சார்பில் பரதன் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 2 என தற்காலிகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்துக்கு தமண் இசையமக்க, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகள் பாபு ப்ரீத்தி கவனக்க, கலை இயக்குநர் பொறுப்பேற்றிருக்கிறார் கிராபர்ட். மக்கள் தொடர்பு பணிகளுக்கு நிகில் அண்ட் குழுவினர் பொறுப்பேற்றிருக்கின்றனர்.

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.