தயாரிப்பாளர் சங்கம் போட்ட மொட்டை கடுதாசி?

0

 329 total views,  1 views today


96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஊதியபாக்கி இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்

சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நந்தகோபால், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாக குறிப்பிட்டார். இதுவரை தான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் தனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் முழுமையாக வழங்கியிருப்பதாக தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா அல்லது ஒரு சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டு பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் திங்கள் கிழமைக்குள்ளாக உரிய முடிவை எடுக்க வேண்டுமெனவும் அவ்வாறு எடுக்கவில்லையெனில் தான் ஒரு முடிவை அறிவிக்க உள்ளாதாகவும் தெரிவித்தார் .தயாரிப்பாளர்கள் சங்கம் பேசி எடுக்கிற எந்த முடிவுக்கும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார் நந்தகோபால்..திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினுள் மோதல்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு அது குறித்து முழுமையான பதில் திங்கள் கிழமை தெரிவிக்கிறேன் எனவும் நந்தகோபால் தெரிவித்தார்.
அத்துடன் தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தினால் நான் office of the Director General competition commisiion of india ,New Delhi என்கிற அமைப்பின் மூலம் தகுந்த மேற் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார் நந்தகோபால்..

Share.

Comments are closed.