நடிகர் சங்கம் அவசர அறிக்கை

0

 399 total views,  1 views today

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட கூறி 100 நாட்களாக அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மீது இன்று போலீஸார்  துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது. 
10பேர் உயிரிழந்து ,பலரும் காயம்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாக இருக்கிறது.
இந்த துப்பாக்கி சூட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
 மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது. 
கடந்த மாதம் வள்ளூவர் கோட்டத்தில் சினிமா துறையின் சார்பில்  நடைப்பெற்ற அறவழிப்போராட்டத்தில் ஸ்டார்லெட் ஆலை மூட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி சினிமா துறையை சேர்ந்த 5 ஆயிரம் தொழிலளர்களிடம் கையெப்பம் பெற்று ஆளுநரிடம் மனு கொடுத்தோம். 
மக்கள் போராட்டம் வலுவடைந்திருக்கிற நிலையில் இனியும் தாமதிக்காமல் ஸ்டார்லெட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம்  வலியுறுத்துகிறது. 
 
— தென்னிந்திய நடிகர் சங்கம்
Share.

Comments are closed.