Wednesday, September 23

பிரபுதேவா வெளியிட்ட கூத்தன் படத்தின் “ மங்கிஸ்தா கிங்கிஸ்தா” மேக்கிங் வீடியோ

Loading

நடனப்புயல் இந்தியாவின் மைக்கில் ஜாக்ஸன் பிரபுதேவா வெளியிட்ட
டீ .ஆர் பாடிய கூத்தன் படத்தின்
“ மங்கிஸ்தா கிங்கிஸ்தா” மேக்கிங் வீடியோ

நீல்கிரிஸ் முருகன் தயாரிப்பில் அறிமுக நாயகன் ராஜ்குமார் கலக்கலாக நடித்திருக்கும் படம் கூத்தன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் இரண்டு பாடல்களை பிரபலங்களால் வெளியிடப்பட்டு பரபரப்பான நிலையில் இப்போது இப்படத்தின்
மங்கிஸ்தா கிங்கிஸ்தா என்ற மேக்கிங் பாடலை நடனப்புயல் பிரபுதேவா தன் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிட்டார். இப்பாடலை இடையமைப்பாளர் பாலாஜி இசையில் பிரபல இயக்குநர் டி. ராஜேந்தர் பாடியுள்ளார்.

நடன அமைப்பாளராக இருந்து இந்தியாவின் நடன முகமாக புகழ்பெற்ற பிரபு தேவா, கூத்தன் படம் சினிமா நடனம் ஆடுபவர்களை மையமாக கொண்டது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்வுடன் பாராட்டினார். மேலும் இப்படத்தில் அட்டகாசமாக நடனமாடியிருக்கும் புதுமுகம் ராஜ்குமார் மிகப்பெரும் வெற்றிபெறுவார் என வாழ்த்தினார்.

திரைக்கு வரும் முன்னே பிரபலங்களின் பாராட்டைப்பெற்ற கூத்தன் திரைப்படம் மிக விரைவில் ரசிகர்கள பார்வைக்கு வரவிருக்கிறது.