மெய் சிலிர்த்து போனேன்…” என்கிறார் ‘புரியாத புதிர்’ படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம்

0

 988 total views,  1 views today

DSC_0281
திகில் படங்களுக்கு இசையமைப்பது என்பது எல்லா இசையமைப்பாளருகளுக்கும், குறிப்பாக அறிமுக இசையமைப்பாளர்களுக்கு சவாலான காரியம் தான். அந்த வகையில், விஜய் சேதுபதி – காயத்திரி நடித்து இருக்கும்  ‘புரியாத புதிர்’ திரைப்படம் மூலம்  அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சி எஸ் சாம், தன்னுடைய பணியை செம்மையாக செய்திருக்கிறார் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். ஏற்கனவே வெளியாகி, இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘புரியாத புதிர்’ படத்தின் பாடல்களே அதற்கு சிறந்த உதாரணம். அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த ‘புரியாத புதிர்’ படத்தை ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே சதீஷ் குமார்.
“ஒரு அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் நான் அடியெடுத்து வைப்பதற்கு மிக சரியான திரைப்படம் ‘புரியாத புதிர்’. இந்த படத்தின் பாடல்கள் யாவும் இசை பிரியர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.
விஜய் சேதுபதி சாரின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, என்னை அறியாமலையே நான் மெய் சிலிர்த்து போய் விடுவேன். பொதுவாக படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகளுக்கு தான் கதை எழுதப்பட்ட காகிதத்தையும், வசனங்களையும் கொடுப்பது வழக்கம், ஆனால் எங்கள் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, இசையமைப்பாளரான எனக்கும் ஒரு காகித்தை கொடுத்தார். அதில் எந்த காட்சிக்கு என்ன இசை வர வேண்டும் என்றும், எந்த மாதிரியான இசை கருவிகளை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எழுதி இருந்தது. இசை ஒரு முக்கிய கதாபாத்திரமாகாவே இந்த படத்தில் பயணிப்பதால், தேவையான இடங்களில் மட்டுமே பின்னணி இசையை கொடுத்து இருக்கிறோம். இதுவரை எங்களின் ‘புரியாத புதிர்’ படத்தை பார்த்தவர்களிடம்  இருந்து  நல்ல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் இது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுப்புறம் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை நினைக்கும் போது, சற்று பதட்டமாக தான் இருக்கின்றது. ஜனவரி 13 ஆம் தேதி, எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான நாள்.” என்று மிகுந்த எதிர்பார்ப்புடன்  கூறுகிறார் ‘புரியாத புதிர்’ படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம்.

 

Share.

Comments are closed.